திங்கள்

பாகிஸ்தானுக்கு 100 ஏவுகணைகளை விற்க பிரேசில் முடிவு


பாகிஸ்தானுக்கு 100 ஏவுகணை விற்பதற்கு பிரேசில் முடிவு தெரிவித்துள்ளது. வானிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்க வல்லவை இந்த ஏவுகணைகள், இவற்றைக்கொண்டு ராடார் கண்காணிப்பு நிலையங்களை தாக்கமுடியும். இது தொடர்பாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் கூறியதாவது; இந்த ஏவுகணை விற்பனை பேரம் 10.8 கோடி டொலர் மதிப்புமிக்கதாகும். கடந்த வாரத்தில் மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து இந்த விற்பனை தடைப்படுமா என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பேரம் பேசுவது பாகிஸ்தானிடம்தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

சனி

இந்திய அழுத்தத்திற்கு அடிபணிந்து யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படாது - அமைச்சர் கெஹலிய


இந்தியா மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படும் வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. புலிகள் ஆயுதங்களை களைந்தால் மட்டுமே யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்படும. இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தற்போது அரச படையினரின் முன் நகர்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கி வருகிறார் என படைத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றது. படைநடவடிக்கைகள் உக்கிரமடையும்போது பிரபாகரன் வன்னியை விட்டு வெளியேறக்கூடும். புலிகள் ஆயுதங்களை களையும் வரையில் யுத்தநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

திங்கள்

இலங்கை தமிழர் நிவாரணத்திற்காக ஷூக்களுக்கு பொலிஷ் செய்யும் தமிழக இளைஞர்


இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து பாதணிகளை பொலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார். இவர் இன்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பொலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் கொள்கிறார். ஒரு வாரத்திற்கு இதே போல பாதணி பொலிஷ் செய்து இதன் மூலம் கிடக்கும் தொகையை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஞாயிறு

வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பதிலடியாக இந்தக் கொடூர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம்


அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறிவரும் வங்கதேச முஸ்லிம்களும், இந்திய அரசுக்கு எதிராக மறைமுகப் போர் நடத்திவரும் ஜிகாதி குழுக்களும் இணைந்து ஐ.எஸ்.ஐ. போன்ற நாசகார அமைப்புகளின் உதவியுடன் இக் கொடியசெயலை அரங்கேற்றியுள்ளன. “ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லமி” (ஹ_ஜி) என்ற வங்கதேச பயங்கரவாத அமைப்பின் உதவியில் இச் செயல்நடந்துள்ளது என்று போலீஸார் கருதுகின்றனர். குண்டு வெடிப்புகளை நிகழ்த் தியவர்கள் "பேட்மேன்' என்;ற சங்கேத வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் முதலில் பெங்களூர், பிறகு ஆமதாபாத், தில்லி, மணிப்பூர் இப்போது அசாம் ஆகிய ஊர்களில் குண்டுவைக்க திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது. இதில் எஞ்சியிரு ப்பது "என்' என்ற எழுத்து. இது நொய்டாவாகவோ (தில்லியை அடுத்து இருப்பது), நாகபுரி யாகவோ (மகாராஷ்டிரம்) நாகாலாந்தாகவோ இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. "பி.இ.-3' ரகம்: அசாமில் 4 ஊர்களில் வெடித்த குண்டுகளில் பயன் படுத்தப் பட்டிருப்பது ஆர்டிஎக்ஸ் ரக வெடி மருந்து மட்டும் அல்ல, அமெரிக்கா, ரஷியா போன்றவை ,ராணு வங்களில் பயன்படுத்தும் "பி.இ.-3' ரக வெடிமருந்து என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்கின்றனர். அசாமில் இறந்தவர்களின் உடல்கள் கருத்தும் கருகியும் காணப்பட்டன. பி.இ. ரக வெடிமருந்துகள்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த குண்டுவெடிப்புகளுக்கு உல்ஃபா அமைப்பு காரணமோ என்ற சந்தேகம் முதலில் இருந்தது. உல்ஃபா இயக்கத் தையும் அதன் ஆயுதப் பிரிவையும் இராணுவமும் துணைநிலை இராணுவமும் கடுமையாக ஒடுக்கிவிட்டன. போதாக்குறைக்கு அதன் அமைப்பில் பிளவு ஏற்பட்டு எந்த விதத் தாக்குதலுக்கும் திறன்இன்றி அது பலமிழந்துவிட்டது. எனவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் உல்ஃபா அல்ல என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.



கடந்த செப்டம்பர் மாத மத்தியில் வங்கதேசத்திலிருந்து 15 பேர் கொண்ட தீவிரவாதிகள் கும்பல் இந்தியாவுக்குள் ஊடுருவப் போவதாக இராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தூப்ரி மாவட்டத்தில் ராணுவம் கண்காணித்துக்கொண்டிருந்தபோது 15 பேர் கொண்ட கும்பல் இந்திய எல்லைக்குள் வந்து கொண்டிருந்தது. இராணுவத்தினர் உடனே துப்பாக்கியால் சுட்டனர். அவர்களும் பதிலுக்குச் சுட்டனர். அந்தச் சண்டைக்குப்பிறகு கும்பலைச் சேர்ந்த 7பேர் அங்கேயேபிணமாகக் கிடந்தனர். மற்றவர்கள் இந்திய எல்லைக்குள் எங்கோ மறைந்துவிட்டனர். அவர்களை இராணுவத்தினரும் போலீஸாரும் தேடினர். ஆனால் அவர்கள் உள்ளூரில் யாருடைய துணையாலோ மறைந்து தப்பிவிட்டனர். வங்கதேசிகளை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும் என்று அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஆசு) கிளர்ச்சியைத் தொடங்கியது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் கிளர்ச்சிகளை அறிவித்தன. வங்கதேசிகள் என்ற சாக்கில் ஆண்டாண்டு காலமாக வாழும் இந்திய முஸ்லிம்களை வெளியேற்றும் சதி இது என்று அவர்கள் கண்டித்தனர். அதே சமயம், சட்டவிரோதமாக அசாமில் தங்கியவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 30 வங்கதேசிகளை வெளியேற்ற அசாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந் நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி முழு அடைப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் அழைப்புவிடுத்தன. உடால்குரி மாவட்டத்தின் ரொடா என்ற ஊரில் போடோ இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் சிலர் வீதிகளில் வந்துகொண்டிருந்தனர். முழு அடைப்பு அறிவித்திருக்கும்போது வீதியில் எப்படி நடக்கலாம் என்று கேட்டு முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் அவர்களைக் கத்தியால் குத்தினர். அதில் ஒருவர் இறந்தார், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதையடுத்து போடோக்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தில் 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இக் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது வங்கதேச முஸ்லிம்கள் என்பதால் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பதிலடியாக இந்தக் கொடூர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று காவல்துறைத் தலைவர் ககன் சர்மா நிருபர்களிடம் தெரிவித்தார்.

செவ்வாய்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 4 உறுப்பினர்கள் நஞ்சு வைத்துக் கொலை!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நால்வரின் கூடவே இருந்து பழகி கொலை! புரிந்த மட்டு.குரகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து விடுதலைப் புலிகளின் உளவாளிகள் அங்கிருந்த ஆயதங்கள் மற்றும் முக்கிய உபகரணங்களுடன் தப்பியோட்டம்!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நால்வரின் விபரம் பின்வருமாறு, கலாவதி புஷ்பேந்திரன் (அஜந்தன்) – வாழைச்சேனை, பாக்கியராசா சிறீதரன் (பில்லாளன்) – மயிலம்பாவெளி, கேதாரம் (மணிவண்ணன்) – ஏறாவூர், கந்தய்யா செல்வராசா (தாசன்) – கொம்மாதுறை. இச்சம்பவத்தின் காரணமாக, கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே, கொதிப்பில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்திலும் கண்டனப் பேரணியிலும் முக்கிய தொனிப்பொருளாக “பிரபாகரனும் அவரது சகாக்களும் வடபகுதி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் கோழைச் செயலை நிறுத்தவேண்டும், அம்மக்களை அவர்களின் விருப்பப்படி வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்ற கோஷங்களே முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தன. அதனையே அங்கு கருணா அம்மானும் மேடையேறி சூடு பறக்கக் கூறியிருந்தார். தமக்கெதிரான ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஒட்டுமொத்த தமிழினமே திரண்டிருந்ததைக் அவதானித்த பிரபாகரன் தன் சகாக்களைப் பார்த்து போட்ட பெருங் கூக்குரலின் பலனாகவே, ஆர்ப்பாட்ட தினத்தன்று மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைக் காரியாலய வளாகத்தில் கைக்குண்டு வெடித்துச் சிதறியது.

எனினும், அங்குள்ள பாதுகாப்புப் பலத்தையுணர்ந்த அவரின் போராளிகள் கைக்குண்டைக் கழற்றி வெட்டாந்தரையில் வீசிவிட்டுப் போனது அவர்களின் புத்தி சாமர்த்தியம். தான் போட்ட கூப்பாடுகள் வெட்டாந்தரையில் வெடிக்க வைக்கவாடா என்று பிரபாகரன் திரும்பக் கேட்டதன் பலனே இன்று அதிகாலை, சந்திவெளியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் கிளைக் காரியாலயமொன்றில் நிகழ்த்தப்பட்ட கொலைகள் எனலாம். அதாவது, குறித்த தினம் அக்காரியாலயத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 9 போராளிகளில் ஐவர் மிக அண்மையில் இணைந்து கொண்ட புதிய உறுப்பினர்களாவர். இவர்கள் ஐவரின் குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக பயமுறுத்தி இவ் ஐவரையும் தம் வசப்படுத்திக் கொண்ட புலிகள், அவர்களுக்கு பல்வேறு மயக்கு வார்த்தைகளையும் ஊட்டி மேற்படி நஞ்சூட்டும் திட்டத்தையும் வகுத்துக் கொடுத்துள்ளனர். அதன்படி தருணம் பார்த்துக் காத்திருந்த இவர்களில் ஒருவர் நள்ளிரவில் தேனீர் தயாரித்துள்ளார். அத்தேனீரில் நஞ்சு கலந்து ஏனைய நான்கு உறுப்பினர்களுக்கும் கொடுத்துள்ளார். இதனை உட்கொண்ட நான்கு உறுப்பினர்களும் உணர்விழந்து விழுந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் காரியாலயத்தில் இருந்த ஆவணங்களையும், குறித்த சில தகவுகளையும் அபகரித்துக் கொண்ட இவ் ஐவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முன்னர் புலிகள் சொன்னபடி, உணர்வற்றுக் கிடந்த 4 உறுப்பினர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதும், செய்யத் தூண்டுவதும் புலிகளுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. உதாரணமாக 23.09.2004 அன்றும் இப்படியான ஒரு இழிவுக் காரியத்தை நிறைவேற்றியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி வன்னியைவிட்டு வெளியேறும் தமிழ்மக்கள்!


வன்னிபுலிகளின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு மத்தியில் தமது உயிரைக்காப்பற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை பணயமாக வைத்து ஆபத்தான் கடல் பாதை ஊடாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்பகுதி ஊடாக புல்மோட்டைக்கு சென்று படையினரிடம் முல்லைவாழ் மக்கள் அடைக்கலம் கோரினர்.

அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் ப+னகரி கடற்பரபு ஊடாக மண்டைதீவு பகுதிக்கு படகுகள் மூலம் தப்பித்து சென்றுள்ளனர். இவ்வாறு வெளியேறிய பொதுமக்கள் 19பேர் கடுமையான காற்று காரணமாக கடலில் தத்தளித்தபோது கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் குழந்தைகள், 11பேர் பெண்கள், 8பேர் ஆண்கள் ஆவர். இவர்கள் வழங்கியுள்ள தகவலின் பிரகாரம் மேலும் பல பொதுமக்கள் வெளியேற எண்ணியுள்ளபோதும் அவர்களை வெளியேறவிடாமல் முல்லைத்தீவு பகுதிக்கு இடம்பெயருமாறும் புலிகள் வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி களமுனைகளுக்கு இராணுவத்தினருக்கான சலவை இயந்திரங்கள் அனுப்பி வைப்பு.


மிகவும் அசாதாரணமான காலநிலையுடனும் பலத்த எதிர்ப்புக்களுடனும் முன்னேறி வருகின்ற படையினருக்கு சலவை இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அங்குள்ள அடை மழை காரணமாக படையினர் சீருடைகளை கழுவி காய வைப்பதென்பது சிரமானதாகையால் துணிகளைக் கழுவிக்காய வைக்கக் கூடிய இயந்திரங்கள் களமுனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை இன்னும் ஒரிரு தினங்களில் மிகவும் முன்னரங்குகளில் உள்ள படையினரைச் சென்றடையும் எனவும் தெரியவருகின்றது:

திங்கள்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கருணாஅம்மான் அவர்களின் மடல்



மக்களையே மனிதக்கேடையங்களாகப் பாவிக்கும் போராட்ட முஸ்தீபு திரிவு படுத்தப்பட்ட செய்திகள் ஏமாற்றும் வீராவேசப் பிரச்சாரங்கள் பகட்டு வார்த்தைகள் தேர்தல் காலத்து நகர்வுகள் என்று இப்போது சாதாரண மக்கள் கூடச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் அன்று கிழக்கு மண் மீட்க்கப்படும் போது எமது மக்களும் ஒரு சில அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் இன்று சந்தோசமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழத் தொடங்கியுள்ளார்கள்.

அதே நிலையே இன்று வன்னி மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் சந்தோஷமான சுதந்திர நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மிகவிரைவில் எந்த ஒரு அடிமைத் தனமின்றி, பயமின்றிக் கருத்துச் சுதந்திரத்துடன் வாழும் நிலை வன்னி மக்களுக்கும் உருவாக்கிக் கொடுக்கப் படவுள்ளது.

கிழக்கை விட வடக்கில் மக்கள் செரிவாக வாழ்கின்றார்கள். வன்னி மக்களின் நலன் கருதியே இன்றைய யுத்த நகர்வுகூடப் படிப்படியாக நகர்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த வன்னி மீட்புக்கான யுத்தத்தால் தமிழர்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உறுதியான கடப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றார். பல சந்திப்புக்களின்போது என்னிடம் உறுதியளித்துள்ளார். அதன்படியே முப்படையினருக்கும் உறுதியான கட்டளைகளை வழங்கியுள்ளார். அடிக்கடி இராணுவச் செயலாளர் இராணுவத் தளபதிகளுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கின்றார். என்பதை இங்கே வன்னி மக்களுக்கு கூறுவதோடு, எந்தவித சலனமும் இன்றி பயமும் இன்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லுமாறும் இவ்விடத்தில் நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுகின்றேன்.

அதேபோன்று எனது அன்புக்குரிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள, எஞ்சியுள்ள போராளிகள் அனைவரும் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அல்லது விடுவிக்கப்பட்ட பகுதிகளிலோ வந்து சரணடையுமாறும் உங்களுக்குரிய சகல பாதுகாப்பிற்கும், மறுவாழ்வுக்கும் கருணாஅம்மான் சகல வழிகளிலும் துணையாய் இருப்பேன் என்பதையும் இங்கே கூறுவதோடு, உங்கள் ஒவ்வொருவரின் வீணான இழப்புக்களையும் கண்டு நான் மிகவும் வேதனையடைகின்றேன். என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு தமிழீழம் தான் என்று அரசியல் வீராப்புப் பேசும் உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்கள் அவர்களது உறுப்பினர்களுடன் அல்லது நன்பர்களுடன் வந்து நின்று சண்டை செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் மக்களின் போரியல் உணர்வுடன் 22 வருடகாலமாக களத்தில் மக்களுடன் இருந்தவன் என்ற அனுபவ உணர்வுடன் கூறுகின்றேன்.

அன்றைய ஆட்சியாளர்களின் இனவாத சிந்தனையின் நிமித்தமே தமிழர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வன்முறை, வெளியேற்றம், அவசரகாலச் சட்டம், கைது, காணாமல்போதல் என்று எதுவித சம்பந்தமுமே இல்லாத மக்கள் மத்தியில் ஒருவித பதற்றநிலை அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையிலேயே நானும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்;டேன்.

அதேவேளை எந்தவொரு பிரச்சினைகளுக்கும் ஒருசில அரசியல் தீர்வு உண்டு. அப்படியான சமரசச் சூழல்கள் எத்தனையோ ஏற்பட்டும் அதனை அலட்சியப் படுத்தும் சந்தர்ப்பங்களும் மீண்டும் போருக்கான ஆயத்தங்களைச் செய்யும் சந்தர்ப்பமாகவுமே புலித்தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தனை காலங்களாக பலியாகிக் கொண்டுள்ள போராளிகளின், மக்களின் எதிர்கால வாழ்க்கை பற்றிய எந்தவிதமான ஒரு சிந்தனையும் புலித்தலைமையிடம் இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கே மதிப்பளிக்க மனமில்லாத புலித்தலைமையினால் எத்தனையோ புத்திஜீவிகள், வழிகாட்டிகள், அறிவாளிகள், அரசியல் தலைவர்கள் அழித்தொழிக்கப் பட்டார்கள். இன்றும் அவர்களின் அராஜகம் தாண்டவமாடிக் கொண்டே இருக்கின்றது.

எதிர்கால தமிழினத்தின் வாழ்க்கை அபிலாசைகள், வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாமே பின்தள்ளப்பட்டுக் கொண்டு செல்வதை எந்தவொரு தமிழ்மகனாலும் ஜீரணிக்கவே முடியாது. பிரபாகரனின் புலிப்பிடிக்குள் இருந்து எமது மக்களை, போராளிகளை மீட்க வேண்டும், அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பலத்தின் மூலம் அமைதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்குடனேயே நானும் பல ஆபத்து, அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்தேன்.

தற்போது கிழக்கில் இரண்டு விதமான தேர்தல்களுக்கு முகங்கொடுத்த பிற்பாடு இங்கே எமது கிழக்கு மக்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இருந்த சகோதரத்துவ நிலையை நோக்கி, இன, மத, மொழி, பேதங்களுக்கு அப்பால் நின்று சகோதர உணர்வுடன் வாழ்வதற்கு முற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. இந்த உறவைச் சிதைப்பதற்கும், மாகாண சபை நிர்வாகத்தை குழப்புவதற்கும் எத்தனையோ பல வழிகளிலும் புலித்தலைமையிலும் அதன் பினாமிகளாலும், சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

எதிர்காலத் தமிழர்களின் கல்வி, கலாச்சாரம், அறிவு, சமயம் என்று பண்படுத்தி ஒரு சிறந்த முற்போக்குச் சிந்தனையுள்ள கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ள இக்கால கட்டத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள புலித்தலைமை கடந்த 25 வருடங்களைத் தாண்டியும் எங்கள் எதிர்கால சந்ததிகளுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமை என்னவென்று பார்த்தால் மனித வெடிகுண்டுகளையும், படுகொலை செய்யத் தூண்டும் உணர்வுகளையுமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

இனியும் மக்கள் ஏமாறத் தயாரில்லை. அழிந்ததும் போதும் இழந்ததும் போதும் ஏதோவொரு அமைதிச் சூழலில் இருந்து அரசியல் மூலம் ஜனநாயக ரீதியில் உரிமைகளை நோக்கி பயணிக்க எம்மக்கள் திரண்டு கொண்டுள்ளார்கள்.. ……



இம்மடலின் இரண்டாவது பகுதி விரைவில் ...........

வியாழன்

ஹிதேந்திரன் மரணமும் காவல் துறையும்


தந்தை அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலிகும் செல்ல பிள்ளை ஹிதேந்திரன் வயது 16, சாலை விபத்தில் சிக்கி இறைவனடி சேர்ந்து விட்டான் .ஆனால் அவன் இதாயம் இன்றும் துடித்து கொண்டு இருகிறது. வாழும் பொழு உதவி செய்யதா நம்மில் மரணித்தும் 5 பேருக்கு உயிர் கொடுத்து உதவி உள்ளான்.இருவருக்கு கண் பார்வை கொடுக்க உள்ளான்.
கண்டிபாக உனக்கு சொர்கம் தான் நண்பா.......மகன் உடல் உறுப்பை தானம் செய்யவந்த பெற்றோருக்கு எனது சல்யூட்.
போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 14 கிலோ மீட்டர் தூரத்தை 11 நிமிடங்களில் அடைந்து இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி அடைய உதவி செய்யத உதவி கமிஷனர் மனோகரனுக்கு மனமார்ந்த நன்றி.

ஆனால் பல விபத்துகலுக்கு காரணமக நம் போக்குவரத்து காவல் துறை உள்ளது.
1.பல சமயங்களில் போக்குவரத்து சிர் செய்யமல் நிழலுகு ஒதுங்குவது, டி கடைஇல் அமர்வது
2.அனுமதி இல்லாத கனரகா வாகனகளை அனுமதிபது. (மீன்பாடி வண்டிக்கு சென்னை நகரில் அனுமதி இல்லை)
3. அதிக வேகத்துடன் செல்லும் வகனத்தை கண்காணிக்காமல் விடுவது.

விபத்துகளுக்கு முக்கிய கரணம் வட்டார போக்குவரத்து துறை

1.வயது குறைந்தவருக்கு உரிமம் அளிப்பது
2.வாகனம் ஒட்ட தெரியாதவருக்கு கூட பணம் பெற்று கொண்டு உரிமம் அளிப்பது
3.சரியான முறையில் புதுபிக்காத வாகணத்திற்க்கு FC அளிப்பது.

வட்டார போக்குவரத்து துறை உழலின் கோட்டையாக இருகிறது.இங்கு புரொக்கர்களின் கொடி தான் பறக்கிறது

என் மனம் கவர்த்த அழகி










என் மனம் கவர்த்த அழகி



இந்தியாவின் அழகு கேரளா .....



கேரளாவின் அழகு இவள் தான் .........



பாண்டிய மன்னனின் பரம்பரையோ.........



மௌனத்திலும் புன்னகை !!! ஆம் இவள் " புன்னகையின் புதையலே "



ஆம் இவள் என் மனம் கவர்த்த அழகி ..........



"சுல்தான் தஸ்தகீர்"



என்னையா நடக்குது நாட்டுல

என்னையா நடக்குது நாட்டுல....

1. கேப்டன் : பல முறை கலைஜர் கையாள விருது வங்கியவரு.... கலைஜர் மாதிரி தலைவர் இல்லையென்று சொன்னவரு..... தி மு க கழகத்தில செல்ல பிள்ளைய இருந்தவரு...... கட்சி தலைவரு ஆனதும் கலைஜற கருணாநிதி என்று சொல்றாரு ..... எந்த கட்சி உடனும் சேர மாட்டேன் என்று சொன்னவரு மக்சிஸ் உடன் சேறுவோம் என்று சொல்றாரு .... டி ஆர் மீடிங்க்ள பெட்ரோல் குண்டு போடுறாரு ..... காமடியன் விட்டுல கள்ள போடுறாரு .... நைட் அனா சரக்கு போடுறாரு .... விட்ட சுத்தி மின்சார வேலி போடுறாரு ......


2. தி மு க : கல்யாணம் பண்ணிகதிங்க அது பவ செயல் என்று சொன்ன பெரியாருக்கு ரெண்டு கல்லாயணம் ....... அத கடைபிடிச்ச கலைஜருக்கு எதனை கல்யாணம் தெரியல ..... அதனால பெரியார் விருது கலைஜருக்கு கொடுபதில தப்பு இல்ல ....


3. காங்கிரஸ் : ஒரு காங்கிரஸ் தலைவரு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேட்டு போய்டுச்சி என்று சொல்றாரு ..... ஒரு தலைவர் தமிழ் நாட்டுல கமர்ராஜர் அட்சி நடக்குது என்று சொல்றாரு எது யா உண்மை ......


4. அம்மா : விடு முறைக்கு முனு மாசம் நாலு மாசம் கோடா நாடு போறங்களே அங்க என்னதய இருக்கு ....


5. ஐயா : டாக்டர் ஐயா ! மது ஒழி மது ஒழி என்று சொல்றிங்களே உங்க கட்சில 90% குடி மகன்களாக இருகிரன்களே !!! சரி அத விடுங்க சின்ன டாக்டர் சுகாதார அமைச்சர இருக்கிறார் அவரு என்னத்த செஞ்சாரு ...... இந்திய முழுவதும் மது ஒழிச்ச என்ன ??? தமிழ் நாட்டுல அட்சி பிடிக்க தமிழ் நாட்டுக்கு மட்டும் தான் மது ஒழிப்பு ...... என்ன drama போடுரிங்கள ???



புதன்

மரியாதையை அளிக்கபட வேண்டிய ராமகோபாலன்

ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை :
கர்நாடக முதல்வர் எதியூரப்பா, கர்நாடகா-பெங்களூர் ஆர்ச் பிஷப்பை அவரது வீட்டில் சென்று சந்தித்திருக்கிறார். ஆனால், ஆர்ச் பிஷப், எதியூரப்பாவை வரவேற்காமல் தன்னுடைய வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து நாங்கள் புண்படுத்தப்பட்டதாக ஆவேசமாகத பேட்டியளித்திருக்கிறார்.இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. முதல்வர் எதியூரப்பா ஆர்ச் பிஷப் வீட்டிற்கு போயிருக்க கூடாது. நமது நாட்டில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு நல்ல முன் உதாரணத்தை கர்நாடக முதல்வர் செய்யப் போய் அவமதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஏராளமானவர்கள் வருந்தியுள்ளார்கள்.பாஜக ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவ கெளடாவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து கலவரங்களை உண்டாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலையச் செய்ய தேவாலயங்களை தாக்கியிருக்கக்கூடும்.தேவாலய தாக்குதல் சம்பவங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்பும் அரசு, ஒரிஸ்ஸாவில் லட்சுமணானந்தா கொலை சம்பவத்தின்போதும், இந்துக்கள் பாதிக்கப்பட்டபோதும் குழுவை அனுப்பாதது ஏன்?தேவாலயங்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்போவதாக அறிவித்த அரசு, கோவில்களை தாக்குபவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.மோசடி மதமாற்றமும், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி நடத்தப்படும் பிரசாரங்களும்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது உலகறிந்த உண்மை.இதை ஆர்ச் பிஷப் நிறுத்தினால் அமைதி திரும்பும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்து மனப்பான்மையுடன் நடக்க வேண்டாம் என்றும், கலவரங்களில் குளிர்காய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.

என்னுடைய கருத்துக்கள் :

வயது முதிர்தவர் என்ற ஒரே காரணத்தால் மரியாதையை அளிக்கபட வேண்டிய ராமகோபாலன் அவர்களுக்கு, உங்களுடைய இந்த பேட்டி இந்து தீவிரவாதத்தை காட்டுகிறது. இந்திய நாடு இந்துக்களுக்கு மட்டுமே என்பது போல் நடந்து கொள்கிறிர்கள். தமிழ் நாட்டில் பா. ஜா. கா. ஆட்சி நடந்து இருத்தல் சர்ச்சுகளையும் மசுதிகளையும் உடைக்க நீங்கள் தான் தலைமை ஏற்று சென்று இருபிர்கள் . தலித் இந்துகள் பணத்திற்காக கிருதுவ மதத்தை ஏற்கிறார்கள் என்பது உண்மை தான், ஏன் என்று சிந்திர்களா ? தலித் இந்துக்களுக்கு என்ன மரியாதையை இருக்கு உங்கள் மதத்தில் தலித் மக்கள் கோவில் வரை அனுமதி இல்லை !!! பிறகு எதற்கு அவர்களுக்கு அந்த மதம் . "முதல்வர் எதியூரப்பா ஆர்ச் பிஷப் வீட்டிற்கு போயிருக்க கூடாது" என்று கூறும் நீங்கள் காவேரி பிரச்சனையை திர்த்து வைக்க உங்கள் எதியூரப்பாவிடம் உரைகவேண்டமா.... ஒரு முதல்வர்ரக இருந்து கலவரத்தை அடக்காமல் பிஷப் விட்டில் என்ன வேலை ??? ஒரிசாவில் பற்றிய தீ கர்நாடகத்தில் பற்ற காரணம் யர்ர் என்று உங்களுக்கு தெரியாத ??? ஏன் இந்த வன்முறை சிலர் இஸ்லாம் என்ற போர்வையில் செய்யும் திவிரவததுகு இணையாக இந்திய முழவதும் உங்கள் செயல்கள் உள்ளன .... தயவு செய்து விட்டுவிடுங்க இந்தியாவ ..... உங்க புள்ள குட்டி நல்ல இருக்கும் .......

செவ்வாய்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது எனது உரிமை" -



லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்திரன். ".. ஈழப் பிரச்னையில் எந்த இயக்கங்களுக்கும் நான் ஆதரவாகப் பேசவில்லை. வேண்டுமென்றால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பயணம் செய்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டப் போகிறேன். வேறு மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டால் மத்திய அரசோ அந்த மாநில மக்களோ அமைதியாக இருந்து விடுவார்களா? அடிபடுவது தமிழன் என்பதால் இந்த அவமதிப்பா?’’

திங்கள்

ரஜினின் எந்திரன் கதை





ரஜினின் எந்திரன் கதை : இந்த வருடம் ஹிந்தியில் ஹர்மன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த லவ் ஸ்டோரி 2050 கதை தானுங்க சில மற்றகளுடன் எந்திரன் தயாரிகபடுகிறது . இதில் ஹர்மன் போலவே ரஜினிக்கும் இரட்டை வேடம் நிஜ ரஜினி மற்றும் ரோபோ ரஜினி லவ் ஸ்டோரி நாய் ரோபோ உம் உண்டு . மொத்தத்தில் காபியோ காபி இப்போதே எந்திரன் காண ஆசை படுபவர்கள் லவ் ஸ்டோரி காணலாம் . "கண்டிப்பாக பாட்டு தமிழ்ல தாங்க சங்கர் ஸ்டைல்ல " சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல மத்தவங்க ப்ல்லொவ் பண்ணலாம் ஆனா மத்தவங்க கதய ரஜினி ப்ல்லொவ் பண்ணலாமா...... புதுசா யோசிங்க பா .......

மின்சார சேமிப்பு மிக அவசியம் .

ஆற்காடார் எதோ மின்சாரத்தை வச்சிக்கிட்டு கொடுக்காத மாதிரி பேசுறிங்களே!!! நம்ம தமிழ் நாடுல எந்தனை ஆபீஸ்ல, வீட்டுல ஆட்களே இல்ல்லமா பேன், லைட், குளிர் சாதனா பெட்டி ஓடுது தெரியுமா? பொறக்கும் போதே என்ன பேன் உடன்ன பொறந்தோம் ? யாரும் மின்சாரத்தை சேமிகதனலே இந்த நிலை . நீர் , பெட்ரோல், மின்சார சேமிப்பு மிக அவசியம் .

திண்ணை காலியாகுமா ???




நாடாளுமன்ற திண்ணை மீது, அண்ணா தி மு க அம்மாவுக்கு ஆசை என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அணு ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றை கூறி அவர்கள் எல்லாம் பதவி விலகிவிட வேண்டும். ஊழல்கள் பல புரிந்த இவர் பதவியிலே வந்து அமர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்.


திண்ணை காலியாகுமா என்று தினமும் இங்கே கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர் இப்போது பிரதமர் அளவிற்கு கூச்சலிட முன்னேறியிருக்கிறார்.


இவர் தோழமை கொள்ள முயன்ற பாஜக மட்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானதா? இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு இந்த அறிக்கை மூலம் தூண்டில் போட முனைகிறாரா? இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா, பிரதமரை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறு

தமிழக போலீஸ்க்கு 150 வயசு


தமிழகக் காவல்துறை 150-வது ஆ‌ண்டி‌ல் அடியெடு‌த்துள்ளது. வரும் காலங்களில் பொதுமக்களின் நண்பனாக பாதுகாவலனாக, தியாக மனப்பான்மையுடன் செயல்பட்ட தமிழ்புறா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது

பாவனாக்கு டும் ... டும் ... டும்......



ஜெயம் கொண்டான்' படத்துல நடிக்க ஆரம்பிச்ச இந்த ஆறுமாசமாகத்தான் விநய் பழக்கம். முதல்நாள் ஷூட்டுல விநய் எப்படிப்பட்ட ஆளுன்னு தெரியாம முழிச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது சாரும் என்னை மாதிரியே............... எங்களுக்குள்ளே ஒரேஅலைவரிசையும்கூட. இதனால எங்களுக்குள்ளே நல்ல ??????? நட்பு ???? இருக்கு. வாடா... போடானு கூப்பிட்டால்கூட விநய் டென்ஷன் ஆகறது இல்ல.


அப்ப சரி எப்ப பாவனா டும் ... டும் ... டும்......

கலைஜர் அறிவாலயம்


தி மு க சார்பில் திருச்சில் கலைஜர் அறிவாலயம் திறக்கரங்கோ........

அண்ணா தி மு க சார்பில் "அம்மா அறிவாலயம்" எப்போ திறபங்க...................

சிக்கரம் திறங்க பன்னீர் ..................

மன்மோகன் சிங்க்குக்கு புஷ் வாழ்த்து


" அணு சக்தி ஒபந்தம் வெற்றி " மன்மோகன் சிங்க்குக்கு புஷ் வாழ்த்து. ஆனால் அணு குண்டு சோதனை இந்தியா நடத்த முடியாது .....அண்ணா.......

ரெண்டு சிட்டு .......

சரத்குமார் ச ம க க்குஅண்ணா தி மு க வில் ரெண்டு சிட்டு .......
சரத் யோசனை ........

சன் டிவி "முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை"


"முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை" எடுக்கப்படும் என சன் டிவி கூறி உள்ளது . சன் டிவி மீது மட்டும் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி அறிக்கை விடுவது மக்கள் மத்தியீல் களங்கம் ஏற்படுத்துவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் , இல்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என சன் டிவி தெரிவிதுள்ளது .

.

சரத்குமார் குரல்


CM , ஆர் சி வி கேபிள் TV இல் காட்டும் அக்கறை மின்வெட்டு , விலை வாசி உயர்வு போன்றவற்றில் காட்டட்டும் ......
சரத்குமார் (ச ம க )

சனி

கமலுக்கே தெரியாத ரகசியம்



மர்மயோகி'யில் சகலத் தையும் துறந்த யோகியாக காவி கட்டிய கமல் ஒருவரும், அவரை துரத்தித் துரத்திக் காதலிக் கும் கவர்ச்சிக் கன்னியாக பெண் வேடத்தில் இன்னொரு கமலும் பின்னி எடுத்து வருகின்றார் என்று பலவிதமான செய்திகள்.
மர்மயோகியில் கமல் போட்ட அந்தப் பெண்வேடம்தான் இது! என்ன, பிரமிப்பாக இருக்கிறதா? சரி; உங்கள் ஆச்சர்யத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள். இது ஒன்றும் பெண்வேடம் போட்ட கமல் இல்லை... நிஜமாவே ஒரு பெண்தான். அதுவும் கமலைப்போலவே இவரும் ஒரு பன்முகக் கலைஞர். நடிப்பைத்தவிர, பாட்டு, கவிதை, வசனம், பாடகர்னு பல அவதாரம் எடுக்கும் இவரின் பெயர் டியோன். பென்சில்வேனியா நாட்டுக்காரர்... ஆனால் அவர் இப்படி பெர்ஃபெக்டாக கமல் மாதிரி இருப்பது கமலுக்கே தெரியாத ரகசியம்ங்க..

திருச்சிக்கு டாட்டா......


திருச்சியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 100 கோடி மருத்துவமனைத் திட்டம் அரசியல் காரணங்களால் சேலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அதற்கு இணையான திட்டத்தை செப்டம்பர் 21-ம் தேதி திருச்சி வரும் முதல்வர் கலைஞர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், செப்டம்பர் 25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்துக்கு எதிரே மொட்டையடித்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்; மேலும், தேர்தலில் மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிராகப் பிரசாரம் நடத்துவோம் என்றும் அறிவித்திருக்கும் இந்தக் கூட்டமைப்பில் 149 மக்கள் அமைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன

சன் டி.வி. vs கலைஞர் டி.வி.



செய்திகள், சித்திரம், சிரிப்பொலி' என மூன்று புதிய சேனல்களைத் தொடங்க கலைஞர் டி.வி. திட்டமிட்டிருக்கிறது. அறிவாலயத்துக்கு கலைஞர் டி.வி.அலுவலகம் வந்ததும் அடுத்த மாதம் தொடங்க நினைத்திருந்தார்களாம். இந்தத் தகவல் தெரிந்தோ என்னவோ, வரும் திங்கள்கிழமை முதல் `காமெடி திரை' என்றொரு சேனலைத் தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டது சன் டி.விடி.வி. திட்டமிட்டிருக்கிறது.

நமீதா vs தூத்துக்குடி


திரைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துக் கொண்டிருக்கும் நமீதா என்ற செக்ஸ் புயல், கடந்த 3-ம் தேதி தூத்துக்குடியில் மையம் கொண்டு பொது மேடையில் தோன்றி ரசிகர்களைப் புரட்டி எடுத்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி வஞ்சகம் இல்லாமல் பறக்கும் முத்தங்களை அவர் பறக்க விட்டதால் ஆடிப்போனார்கள் ரசிகர்கள்.

அரசியலில் பரபரப்பாகச் செயல்படுவதில் கில்லாடி என்று பெயரெடுத்தவர் ஹென்றி. அவர் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட வித்தியாசமாக எதையாவது செய்து அசத்துவார். அப்படிப்பட்டவர் அவரது சொந்தக் கடையின் திறப்புவிழா என்றால் மனிதர் சும்மா இருப்பாரா? தூத்துக்குடியில் இருந்து முத்தையாபுரம்வரை நூற்றுக்கணக்கான நமீதாவின் பேனர்களை வைத்து அசத்தியிருந்தார். கலர், கலரான போஸ்டர்களுக்கும் பஞ்சம் இல்லை. `வாராரு வாராரு! நமீதா வாராரு. நகைக்கடையைத் திறந்து வைக்க வாராரு' என்ற பாடல்கள் உள்ளூர் சேனல்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன. இதனால், தூத்துக்குடி மக்கள் மத்தியில் நமீதாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டதை மறுக்க முடியாது.



தூத்துக்குடி -திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒரு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும், வி.ஐ.பி.களையும் கடை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார் ஹென்றி. நமீதா வரும்போது இவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், அனைவரும் தவறாமல் அங்கே ஆஜர் ஆகியிருந்தது ஆச்சர்யம். யாருக்காகவும் காத்திருந்து பழக்கமில்லாத தூத்துக்குடி நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் கூட நமீதாவுக்காகக் காத்திருந்தார்.


பதினொன்றரை மணிக்கு நான்கைந்து கார்கள் புடைசூழ சும்மா அமைச்சர் ரேஞ்சுக்கு வந்து சேர்ந்தார் நமீதா. கருப்பு கலர் டிரெஸ்ஸும் பெரிய சைஸ் கூலிங் கிளாஸுமாக மேடையேறினார் நமி. பளிச்சென்று இருந்த அவரை நெருங்கிப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசாக லத்தியைச் சுழற்றவேண்டியதாகிவிட்டது. சுற்றிச் சுற்றி வந்து கை காட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் பறக்கும் முத்தங்களை நமீதாவை நோக்கிப் பறக்கவிட்டார்கள். அதைப் பார்த்து நமீதா கோபப்படுவார் என்று பார்த்தால், பதிலுக்கு ஏராளமான பறக்கும் முத்தங்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.


"நான் இங்கே வந்தது பணத்துக்காகத்தான். ஆனால், இங்கே வந்தபிறகுதான் தெரிகிறது, என் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்று. இதையெல்லாம் பார்க்கும்போது, பணம் வாங்காமலேயே ரசிகர்களைப் பார்க்க வரலாம் போல தோணுது'' என்று போட்டார் ஒரு போடு.

சென்னை இளம்பெண் கின்னஸ் சாதனை

சென்னையில் 16 வயது சிறுமி ஒருவர் 5 வாகனங்களை தனது பல்லால் இழுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் அப்சரா. 16 வயதே ஆகும் இவருக்கு சிறுவயது முதலே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக, வலிமைவாய்ந்த தனது பற்களால் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தார். இதனையடுத்து 5 வேன்களை 10 மீட்டர் தூரம் தனது பற்களால் இழுத்து சாதனை படைத்தார். இந்த சாதனை நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அப்சராவின் சாதனை பார்வையாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அவரின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்சரா, பலரும் பிரமிக்கத்தக்க சாதனை செய்ய வேண்டும் என்ற தனது விருப்பம் தற்போது முழுமையடைந்துள்ளதாகவும், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் கடும் சண்டை

இலங்கை கிளிநொச்சி பகுதியில் தீவிர சண்டை நடைபெற்றுவருவதால், அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு அந்நாட்டின் அதிபர் ராஜபக்ஷே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் அந்நாட்டு ராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் தாக்குதலை விடுதலைப்புலிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற சண்டையில் புலிகள் 31 பேரும், ராணுவத்தினர் 5 பேரும் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி ராணுவத்தினர் பலர் படுகாயமடைந்ததாகவும், எனினும், புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்துவிட்டதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் கடும் சண்டை நடைபெற்றுவருவதாகவும், இந்த போரில் சிக்கி பலியாகாமல் இருக்க, அப்பகுதியில் உள்ள மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அணு எரிபொருள் சப்ளை குழுமம்

அணு எரிபொருள் சப்ளை குழுமம் (என்.எஸ்.ஜி.) இந்தியாவுக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
"இந்தியா இனிமேல் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது"
நடத்தினால் உடனடியாக சலுகைகள் ரத்தாகும்