திங்கள்

பாகிஸ்தானுக்கு 100 ஏவுகணைகளை விற்க பிரேசில் முடிவு


பாகிஸ்தானுக்கு 100 ஏவுகணை விற்பதற்கு பிரேசில் முடிவு தெரிவித்துள்ளது. வானிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்க வல்லவை இந்த ஏவுகணைகள், இவற்றைக்கொண்டு ராடார் கண்காணிப்பு நிலையங்களை தாக்கமுடியும். இது தொடர்பாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் கூறியதாவது; இந்த ஏவுகணை விற்பனை பேரம் 10.8 கோடி டொலர் மதிப்புமிக்கதாகும். கடந்த வாரத்தில் மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து இந்த விற்பனை தடைப்படுமா என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பேரம் பேசுவது பாகிஸ்தானிடம்தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.