சனி

கமலுக்கே தெரியாத ரகசியம்



மர்மயோகி'யில் சகலத் தையும் துறந்த யோகியாக காவி கட்டிய கமல் ஒருவரும், அவரை துரத்தித் துரத்திக் காதலிக் கும் கவர்ச்சிக் கன்னியாக பெண் வேடத்தில் இன்னொரு கமலும் பின்னி எடுத்து வருகின்றார் என்று பலவிதமான செய்திகள்.
மர்மயோகியில் கமல் போட்ட அந்தப் பெண்வேடம்தான் இது! என்ன, பிரமிப்பாக இருக்கிறதா? சரி; உங்கள் ஆச்சர்யத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள். இது ஒன்றும் பெண்வேடம் போட்ட கமல் இல்லை... நிஜமாவே ஒரு பெண்தான். அதுவும் கமலைப்போலவே இவரும் ஒரு பன்முகக் கலைஞர். நடிப்பைத்தவிர, பாட்டு, கவிதை, வசனம், பாடகர்னு பல அவதாரம் எடுக்கும் இவரின் பெயர் டியோன். பென்சில்வேனியா நாட்டுக்காரர்... ஆனால் அவர் இப்படி பெர்ஃபெக்டாக கமல் மாதிரி இருப்பது கமலுக்கே தெரியாத ரகசியம்ங்க..

திருச்சிக்கு டாட்டா......


திருச்சியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 100 கோடி மருத்துவமனைத் திட்டம் அரசியல் காரணங்களால் சேலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அதற்கு இணையான திட்டத்தை செப்டம்பர் 21-ம் தேதி திருச்சி வரும் முதல்வர் கலைஞர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், செப்டம்பர் 25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்துக்கு எதிரே மொட்டையடித்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்; மேலும், தேர்தலில் மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிராகப் பிரசாரம் நடத்துவோம் என்றும் அறிவித்திருக்கும் இந்தக் கூட்டமைப்பில் 149 மக்கள் அமைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன

சன் டி.வி. vs கலைஞர் டி.வி.



செய்திகள், சித்திரம், சிரிப்பொலி' என மூன்று புதிய சேனல்களைத் தொடங்க கலைஞர் டி.வி. திட்டமிட்டிருக்கிறது. அறிவாலயத்துக்கு கலைஞர் டி.வி.அலுவலகம் வந்ததும் அடுத்த மாதம் தொடங்க நினைத்திருந்தார்களாம். இந்தத் தகவல் தெரிந்தோ என்னவோ, வரும் திங்கள்கிழமை முதல் `காமெடி திரை' என்றொரு சேனலைத் தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டது சன் டி.விடி.வி. திட்டமிட்டிருக்கிறது.

நமீதா vs தூத்துக்குடி


திரைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துக் கொண்டிருக்கும் நமீதா என்ற செக்ஸ் புயல், கடந்த 3-ம் தேதி தூத்துக்குடியில் மையம் கொண்டு பொது மேடையில் தோன்றி ரசிகர்களைப் புரட்டி எடுத்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி வஞ்சகம் இல்லாமல் பறக்கும் முத்தங்களை அவர் பறக்க விட்டதால் ஆடிப்போனார்கள் ரசிகர்கள்.

அரசியலில் பரபரப்பாகச் செயல்படுவதில் கில்லாடி என்று பெயரெடுத்தவர் ஹென்றி. அவர் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட வித்தியாசமாக எதையாவது செய்து அசத்துவார். அப்படிப்பட்டவர் அவரது சொந்தக் கடையின் திறப்புவிழா என்றால் மனிதர் சும்மா இருப்பாரா? தூத்துக்குடியில் இருந்து முத்தையாபுரம்வரை நூற்றுக்கணக்கான நமீதாவின் பேனர்களை வைத்து அசத்தியிருந்தார். கலர், கலரான போஸ்டர்களுக்கும் பஞ்சம் இல்லை. `வாராரு வாராரு! நமீதா வாராரு. நகைக்கடையைத் திறந்து வைக்க வாராரு' என்ற பாடல்கள் உள்ளூர் சேனல்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன. இதனால், தூத்துக்குடி மக்கள் மத்தியில் நமீதாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டதை மறுக்க முடியாது.



தூத்துக்குடி -திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒரு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும், வி.ஐ.பி.களையும் கடை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார் ஹென்றி. நமீதா வரும்போது இவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், அனைவரும் தவறாமல் அங்கே ஆஜர் ஆகியிருந்தது ஆச்சர்யம். யாருக்காகவும் காத்திருந்து பழக்கமில்லாத தூத்துக்குடி நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் கூட நமீதாவுக்காகக் காத்திருந்தார்.


பதினொன்றரை மணிக்கு நான்கைந்து கார்கள் புடைசூழ சும்மா அமைச்சர் ரேஞ்சுக்கு வந்து சேர்ந்தார் நமீதா. கருப்பு கலர் டிரெஸ்ஸும் பெரிய சைஸ் கூலிங் கிளாஸுமாக மேடையேறினார் நமி. பளிச்சென்று இருந்த அவரை நெருங்கிப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசாக லத்தியைச் சுழற்றவேண்டியதாகிவிட்டது. சுற்றிச் சுற்றி வந்து கை காட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் பறக்கும் முத்தங்களை நமீதாவை நோக்கிப் பறக்கவிட்டார்கள். அதைப் பார்த்து நமீதா கோபப்படுவார் என்று பார்த்தால், பதிலுக்கு ஏராளமான பறக்கும் முத்தங்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.


"நான் இங்கே வந்தது பணத்துக்காகத்தான். ஆனால், இங்கே வந்தபிறகுதான் தெரிகிறது, என் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்று. இதையெல்லாம் பார்க்கும்போது, பணம் வாங்காமலேயே ரசிகர்களைப் பார்க்க வரலாம் போல தோணுது'' என்று போட்டார் ஒரு போடு.

சென்னை இளம்பெண் கின்னஸ் சாதனை

சென்னையில் 16 வயது சிறுமி ஒருவர் 5 வாகனங்களை தனது பல்லால் இழுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் அப்சரா. 16 வயதே ஆகும் இவருக்கு சிறுவயது முதலே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக, வலிமைவாய்ந்த தனது பற்களால் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தார். இதனையடுத்து 5 வேன்களை 10 மீட்டர் தூரம் தனது பற்களால் இழுத்து சாதனை படைத்தார். இந்த சாதனை நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அப்சராவின் சாதனை பார்வையாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அவரின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்சரா, பலரும் பிரமிக்கத்தக்க சாதனை செய்ய வேண்டும் என்ற தனது விருப்பம் தற்போது முழுமையடைந்துள்ளதாகவும், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் கடும் சண்டை

இலங்கை கிளிநொச்சி பகுதியில் தீவிர சண்டை நடைபெற்றுவருவதால், அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு அந்நாட்டின் அதிபர் ராஜபக்ஷே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் அந்நாட்டு ராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் தாக்குதலை விடுதலைப்புலிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற சண்டையில் புலிகள் 31 பேரும், ராணுவத்தினர் 5 பேரும் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி ராணுவத்தினர் பலர் படுகாயமடைந்ததாகவும், எனினும், புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்துவிட்டதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் கடும் சண்டை நடைபெற்றுவருவதாகவும், இந்த போரில் சிக்கி பலியாகாமல் இருக்க, அப்பகுதியில் உள்ள மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அணு எரிபொருள் சப்ளை குழுமம்

அணு எரிபொருள் சப்ளை குழுமம் (என்.எஸ்.ஜி.) இந்தியாவுக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
"இந்தியா இனிமேல் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது"
நடத்தினால் உடனடியாக சலுகைகள் ரத்தாகும்