செவ்வாய்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 4 உறுப்பினர்கள் நஞ்சு வைத்துக் கொலை!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நால்வரின் கூடவே இருந்து பழகி கொலை! புரிந்த மட்டு.குரகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து விடுதலைப் புலிகளின் உளவாளிகள் அங்கிருந்த ஆயதங்கள் மற்றும் முக்கிய உபகரணங்களுடன் தப்பியோட்டம்!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நால்வரின் விபரம் பின்வருமாறு, கலாவதி புஷ்பேந்திரன் (அஜந்தன்) – வாழைச்சேனை, பாக்கியராசா சிறீதரன் (பில்லாளன்) – மயிலம்பாவெளி, கேதாரம் (மணிவண்ணன்) – ஏறாவூர், கந்தய்யா செல்வராசா (தாசன்) – கொம்மாதுறை. இச்சம்பவத்தின் காரணமாக, கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே, கொதிப்பில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்திலும் கண்டனப் பேரணியிலும் முக்கிய தொனிப்பொருளாக “பிரபாகரனும் அவரது சகாக்களும் வடபகுதி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் கோழைச் செயலை நிறுத்தவேண்டும், அம்மக்களை அவர்களின் விருப்பப்படி வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்ற கோஷங்களே முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தன. அதனையே அங்கு கருணா அம்மானும் மேடையேறி சூடு பறக்கக் கூறியிருந்தார். தமக்கெதிரான ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஒட்டுமொத்த தமிழினமே திரண்டிருந்ததைக் அவதானித்த பிரபாகரன் தன் சகாக்களைப் பார்த்து போட்ட பெருங் கூக்குரலின் பலனாகவே, ஆர்ப்பாட்ட தினத்தன்று மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைக் காரியாலய வளாகத்தில் கைக்குண்டு வெடித்துச் சிதறியது.

எனினும், அங்குள்ள பாதுகாப்புப் பலத்தையுணர்ந்த அவரின் போராளிகள் கைக்குண்டைக் கழற்றி வெட்டாந்தரையில் வீசிவிட்டுப் போனது அவர்களின் புத்தி சாமர்த்தியம். தான் போட்ட கூப்பாடுகள் வெட்டாந்தரையில் வெடிக்க வைக்கவாடா என்று பிரபாகரன் திரும்பக் கேட்டதன் பலனே இன்று அதிகாலை, சந்திவெளியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் கிளைக் காரியாலயமொன்றில் நிகழ்த்தப்பட்ட கொலைகள் எனலாம். அதாவது, குறித்த தினம் அக்காரியாலயத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 9 போராளிகளில் ஐவர் மிக அண்மையில் இணைந்து கொண்ட புதிய உறுப்பினர்களாவர். இவர்கள் ஐவரின் குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக பயமுறுத்தி இவ் ஐவரையும் தம் வசப்படுத்திக் கொண்ட புலிகள், அவர்களுக்கு பல்வேறு மயக்கு வார்த்தைகளையும் ஊட்டி மேற்படி நஞ்சூட்டும் திட்டத்தையும் வகுத்துக் கொடுத்துள்ளனர். அதன்படி தருணம் பார்த்துக் காத்திருந்த இவர்களில் ஒருவர் நள்ளிரவில் தேனீர் தயாரித்துள்ளார். அத்தேனீரில் நஞ்சு கலந்து ஏனைய நான்கு உறுப்பினர்களுக்கும் கொடுத்துள்ளார். இதனை உட்கொண்ட நான்கு உறுப்பினர்களும் உணர்விழந்து விழுந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் காரியாலயத்தில் இருந்த ஆவணங்களையும், குறித்த சில தகவுகளையும் அபகரித்துக் கொண்ட இவ் ஐவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முன்னர் புலிகள் சொன்னபடி, உணர்வற்றுக் கிடந்த 4 உறுப்பினர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதும், செய்யத் தூண்டுவதும் புலிகளுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. உதாரணமாக 23.09.2004 அன்றும் இப்படியான ஒரு இழிவுக் காரியத்தை நிறைவேற்றியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி வன்னியைவிட்டு வெளியேறும் தமிழ்மக்கள்!


வன்னிபுலிகளின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு மத்தியில் தமது உயிரைக்காப்பற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை பணயமாக வைத்து ஆபத்தான் கடல் பாதை ஊடாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்பகுதி ஊடாக புல்மோட்டைக்கு சென்று படையினரிடம் முல்லைவாழ் மக்கள் அடைக்கலம் கோரினர்.

அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் ப+னகரி கடற்பரபு ஊடாக மண்டைதீவு பகுதிக்கு படகுகள் மூலம் தப்பித்து சென்றுள்ளனர். இவ்வாறு வெளியேறிய பொதுமக்கள் 19பேர் கடுமையான காற்று காரணமாக கடலில் தத்தளித்தபோது கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் குழந்தைகள், 11பேர் பெண்கள், 8பேர் ஆண்கள் ஆவர். இவர்கள் வழங்கியுள்ள தகவலின் பிரகாரம் மேலும் பல பொதுமக்கள் வெளியேற எண்ணியுள்ளபோதும் அவர்களை வெளியேறவிடாமல் முல்லைத்தீவு பகுதிக்கு இடம்பெயருமாறும் புலிகள் வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி களமுனைகளுக்கு இராணுவத்தினருக்கான சலவை இயந்திரங்கள் அனுப்பி வைப்பு.


மிகவும் அசாதாரணமான காலநிலையுடனும் பலத்த எதிர்ப்புக்களுடனும் முன்னேறி வருகின்ற படையினருக்கு சலவை இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அங்குள்ள அடை மழை காரணமாக படையினர் சீருடைகளை கழுவி காய வைப்பதென்பது சிரமானதாகையால் துணிகளைக் கழுவிக்காய வைக்கக் கூடிய இயந்திரங்கள் களமுனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை இன்னும் ஒரிரு தினங்களில் மிகவும் முன்னரங்குகளில் உள்ள படையினரைச் சென்றடையும் எனவும் தெரியவருகின்றது:

திங்கள்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கருணாஅம்மான் அவர்களின் மடல்



மக்களையே மனிதக்கேடையங்களாகப் பாவிக்கும் போராட்ட முஸ்தீபு திரிவு படுத்தப்பட்ட செய்திகள் ஏமாற்றும் வீராவேசப் பிரச்சாரங்கள் பகட்டு வார்த்தைகள் தேர்தல் காலத்து நகர்வுகள் என்று இப்போது சாதாரண மக்கள் கூடச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் அன்று கிழக்கு மண் மீட்க்கப்படும் போது எமது மக்களும் ஒரு சில அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் இன்று சந்தோசமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழத் தொடங்கியுள்ளார்கள்.

அதே நிலையே இன்று வன்னி மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் சந்தோஷமான சுதந்திர நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மிகவிரைவில் எந்த ஒரு அடிமைத் தனமின்றி, பயமின்றிக் கருத்துச் சுதந்திரத்துடன் வாழும் நிலை வன்னி மக்களுக்கும் உருவாக்கிக் கொடுக்கப் படவுள்ளது.

கிழக்கை விட வடக்கில் மக்கள் செரிவாக வாழ்கின்றார்கள். வன்னி மக்களின் நலன் கருதியே இன்றைய யுத்த நகர்வுகூடப் படிப்படியாக நகர்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த வன்னி மீட்புக்கான யுத்தத்தால் தமிழர்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உறுதியான கடப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றார். பல சந்திப்புக்களின்போது என்னிடம் உறுதியளித்துள்ளார். அதன்படியே முப்படையினருக்கும் உறுதியான கட்டளைகளை வழங்கியுள்ளார். அடிக்கடி இராணுவச் செயலாளர் இராணுவத் தளபதிகளுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கின்றார். என்பதை இங்கே வன்னி மக்களுக்கு கூறுவதோடு, எந்தவித சலனமும் இன்றி பயமும் இன்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லுமாறும் இவ்விடத்தில் நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுகின்றேன்.

அதேபோன்று எனது அன்புக்குரிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள, எஞ்சியுள்ள போராளிகள் அனைவரும் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அல்லது விடுவிக்கப்பட்ட பகுதிகளிலோ வந்து சரணடையுமாறும் உங்களுக்குரிய சகல பாதுகாப்பிற்கும், மறுவாழ்வுக்கும் கருணாஅம்மான் சகல வழிகளிலும் துணையாய் இருப்பேன் என்பதையும் இங்கே கூறுவதோடு, உங்கள் ஒவ்வொருவரின் வீணான இழப்புக்களையும் கண்டு நான் மிகவும் வேதனையடைகின்றேன். என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு தமிழீழம் தான் என்று அரசியல் வீராப்புப் பேசும் உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்கள் அவர்களது உறுப்பினர்களுடன் அல்லது நன்பர்களுடன் வந்து நின்று சண்டை செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் மக்களின் போரியல் உணர்வுடன் 22 வருடகாலமாக களத்தில் மக்களுடன் இருந்தவன் என்ற அனுபவ உணர்வுடன் கூறுகின்றேன்.

அன்றைய ஆட்சியாளர்களின் இனவாத சிந்தனையின் நிமித்தமே தமிழர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வன்முறை, வெளியேற்றம், அவசரகாலச் சட்டம், கைது, காணாமல்போதல் என்று எதுவித சம்பந்தமுமே இல்லாத மக்கள் மத்தியில் ஒருவித பதற்றநிலை அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையிலேயே நானும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்;டேன்.

அதேவேளை எந்தவொரு பிரச்சினைகளுக்கும் ஒருசில அரசியல் தீர்வு உண்டு. அப்படியான சமரசச் சூழல்கள் எத்தனையோ ஏற்பட்டும் அதனை அலட்சியப் படுத்தும் சந்தர்ப்பங்களும் மீண்டும் போருக்கான ஆயத்தங்களைச் செய்யும் சந்தர்ப்பமாகவுமே புலித்தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தனை காலங்களாக பலியாகிக் கொண்டுள்ள போராளிகளின், மக்களின் எதிர்கால வாழ்க்கை பற்றிய எந்தவிதமான ஒரு சிந்தனையும் புலித்தலைமையிடம் இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கே மதிப்பளிக்க மனமில்லாத புலித்தலைமையினால் எத்தனையோ புத்திஜீவிகள், வழிகாட்டிகள், அறிவாளிகள், அரசியல் தலைவர்கள் அழித்தொழிக்கப் பட்டார்கள். இன்றும் அவர்களின் அராஜகம் தாண்டவமாடிக் கொண்டே இருக்கின்றது.

எதிர்கால தமிழினத்தின் வாழ்க்கை அபிலாசைகள், வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாமே பின்தள்ளப்பட்டுக் கொண்டு செல்வதை எந்தவொரு தமிழ்மகனாலும் ஜீரணிக்கவே முடியாது. பிரபாகரனின் புலிப்பிடிக்குள் இருந்து எமது மக்களை, போராளிகளை மீட்க வேண்டும், அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பலத்தின் மூலம் அமைதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்குடனேயே நானும் பல ஆபத்து, அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்தேன்.

தற்போது கிழக்கில் இரண்டு விதமான தேர்தல்களுக்கு முகங்கொடுத்த பிற்பாடு இங்கே எமது கிழக்கு மக்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இருந்த சகோதரத்துவ நிலையை நோக்கி, இன, மத, மொழி, பேதங்களுக்கு அப்பால் நின்று சகோதர உணர்வுடன் வாழ்வதற்கு முற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. இந்த உறவைச் சிதைப்பதற்கும், மாகாண சபை நிர்வாகத்தை குழப்புவதற்கும் எத்தனையோ பல வழிகளிலும் புலித்தலைமையிலும் அதன் பினாமிகளாலும், சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

எதிர்காலத் தமிழர்களின் கல்வி, கலாச்சாரம், அறிவு, சமயம் என்று பண்படுத்தி ஒரு சிறந்த முற்போக்குச் சிந்தனையுள்ள கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ள இக்கால கட்டத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள புலித்தலைமை கடந்த 25 வருடங்களைத் தாண்டியும் எங்கள் எதிர்கால சந்ததிகளுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமை என்னவென்று பார்த்தால் மனித வெடிகுண்டுகளையும், படுகொலை செய்யத் தூண்டும் உணர்வுகளையுமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

இனியும் மக்கள் ஏமாறத் தயாரில்லை. அழிந்ததும் போதும் இழந்ததும் போதும் ஏதோவொரு அமைதிச் சூழலில் இருந்து அரசியல் மூலம் ஜனநாயக ரீதியில் உரிமைகளை நோக்கி பயணிக்க எம்மக்கள் திரண்டு கொண்டுள்ளார்கள்.. ……



இம்மடலின் இரண்டாவது பகுதி விரைவில் ...........