சனி

நமீதா vs தூத்துக்குடி


திரைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துக் கொண்டிருக்கும் நமீதா என்ற செக்ஸ் புயல், கடந்த 3-ம் தேதி தூத்துக்குடியில் மையம் கொண்டு பொது மேடையில் தோன்றி ரசிகர்களைப் புரட்டி எடுத்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி வஞ்சகம் இல்லாமல் பறக்கும் முத்தங்களை அவர் பறக்க விட்டதால் ஆடிப்போனார்கள் ரசிகர்கள்.

அரசியலில் பரபரப்பாகச் செயல்படுவதில் கில்லாடி என்று பெயரெடுத்தவர் ஹென்றி. அவர் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட வித்தியாசமாக எதையாவது செய்து அசத்துவார். அப்படிப்பட்டவர் அவரது சொந்தக் கடையின் திறப்புவிழா என்றால் மனிதர் சும்மா இருப்பாரா? தூத்துக்குடியில் இருந்து முத்தையாபுரம்வரை நூற்றுக்கணக்கான நமீதாவின் பேனர்களை வைத்து அசத்தியிருந்தார். கலர், கலரான போஸ்டர்களுக்கும் பஞ்சம் இல்லை. `வாராரு வாராரு! நமீதா வாராரு. நகைக்கடையைத் திறந்து வைக்க வாராரு' என்ற பாடல்கள் உள்ளூர் சேனல்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன. இதனால், தூத்துக்குடி மக்கள் மத்தியில் நமீதாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டதை மறுக்க முடியாது.



தூத்துக்குடி -திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒரு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும், வி.ஐ.பி.களையும் கடை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார் ஹென்றி. நமீதா வரும்போது இவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், அனைவரும் தவறாமல் அங்கே ஆஜர் ஆகியிருந்தது ஆச்சர்யம். யாருக்காகவும் காத்திருந்து பழக்கமில்லாத தூத்துக்குடி நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் கூட நமீதாவுக்காகக் காத்திருந்தார்.


பதினொன்றரை மணிக்கு நான்கைந்து கார்கள் புடைசூழ சும்மா அமைச்சர் ரேஞ்சுக்கு வந்து சேர்ந்தார் நமீதா. கருப்பு கலர் டிரெஸ்ஸும் பெரிய சைஸ் கூலிங் கிளாஸுமாக மேடையேறினார் நமி. பளிச்சென்று இருந்த அவரை நெருங்கிப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசாக லத்தியைச் சுழற்றவேண்டியதாகிவிட்டது. சுற்றிச் சுற்றி வந்து கை காட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் பறக்கும் முத்தங்களை நமீதாவை நோக்கிப் பறக்கவிட்டார்கள். அதைப் பார்த்து நமீதா கோபப்படுவார் என்று பார்த்தால், பதிலுக்கு ஏராளமான பறக்கும் முத்தங்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.


"நான் இங்கே வந்தது பணத்துக்காகத்தான். ஆனால், இங்கே வந்தபிறகுதான் தெரிகிறது, என் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்று. இதையெல்லாம் பார்க்கும்போது, பணம் வாங்காமலேயே ரசிகர்களைப் பார்க்க வரலாம் போல தோணுது'' என்று போட்டார் ஒரு போடு.

கருத்துகள் இல்லை: